வந்துவிட்டது Vu நூறு இன்ச் சூப்பர் டி.வி!

அமெரிக்காவின் கலிபோர்னியாவைத் தலைமையிடமாகக் கொண்டு இயங்கி வரும் நிறுவனம்தான்  “வு டெலிவிஷன்ஸ்” (Vu Televisions) .பதிமூன்று ஆண்டுகளுக்கு முன்பு ஆரம்பிக்கப்பட்ட இந்த மின்னணு நிறுவனம்.


மின் வணிகம் சார்ந்த எல்.இ.டி தொலைக்காட்சி  விற்பனையில் தனக்கென ஒரு தனி இடத்தைப் பெற்றிருக்கிறது. குறிப்பாக இந்தியாவில் இந்த நிறுவனத்தின் தொலைக்காட்சிகள் அதிக அளவில் விற்பனையாகின்றன.


இதன் காரணமாகவே இந்த நிறுவனம் இந்திய நுகர்வோரைக் குறிவைத்து நவீனத் தொழில்நுட்ப வசதிகளுடன் கூடிய எல்.இ.டி தொலைக்காட்சிகளை அவ்வப்போது அறிமுகப்படுத்தி வருகிறது.


இதற்கு முத்தாய்ப்பாக நூறு இன்ச் அல்ட்ரா ஹெச்.டி(ultra – high definition) எல்.இ.டி தொலைக்காட்சியை தற்போது இந்தியாவில் இந்நிறுவனம் அறிமுகம் செய்திருக்கிறது.



இந்தத் நூறு இன்ச் அல்ட்ரா-ஹெச்.டி தொலைக்காட்சி “ஆண்ட்ராய்டு” , “விண்டோஸ் 10 “  ஆகிய இரண்டு ஆபரேட்டிங் சிஸ்டம்களையும்  சப்போர்ட் செய்யும். அதேபோல “டால்பி”, “டிடிஎஸ்” ஆகிய அதி நவீன ஆடியோ தொழில்நுட்ப வசதிகளும் இந்தத் தொலைக்காட்சியில் இருக்கின்றன.


Bluetooth v5.0 இணைப்பு வசதியும், பல யு.எஸ்.பிகளை இணைக்கும்  போர்ட்களும் இதில்  இருக்கின்றன. அதுமட்டுமல்லாமல் பல்வேறு வடிவங்களில் இருக்கும் தகவல்களை 120 GB வரைக்கும் இந்தத் தொலைக்காட்சியில் சேமித்து வைக்க முடியும்.


இந்த நூறு இன்ச் தொலைக்காட்சியின் விலையை  எட்டு லட்சம் ரூபாயாக நிர்ணயித்திருக்கிறது வு டெலிவிஷன்ஸ் நிறுவனம்.