பட்டையைக் கிளப்பும் பகுதி நேர வேலைகள்

கல்லூரிக் காலம் என்பது ஆட்டம், பாட்டம், கொண்டாட்டம்  என்று இருப்பதற்காக  மட்டுமல்ல, பொறுப்புள்ள மனிதர்களாக மாணவர்கள் தங்களை பட்டைதீட்டிக் கொள்வதற்காகவும்தான். குறிப்பாக தங்களிடம் இருக்கின்ற திறமையை முதலீடாக்கி பகுதிநேரப் பணியை மேற்கொண்டால் படிக்கின்ற காலத்திலேயே சம்பாதிக்கவும் செய்யலாம். அப்படி கல்லூரி மாணவர்கள் செய்யக்கூடிய பகுதிநேரப் பணிகள் குறித்த தகவல்கள் இதோ உங்கள் பார்வைக்கு...

Image by mohamed Hassan from Pixabay

பணம் தரும் பயிற்சியாளர் பணி!

கல்லூரி மாணவர்கள் பணம் சம்பாதிக்க உதவும் மிகச் சிறந்த பகுதிநேரப் பணிகளில் ஒன்று பயிற்சியாளர் பணி. பாட்டு, நடனம், ஓவியம், புகைப்படக்கலை, மொழி பயிற்றுவித்தல், எடிட்டிங், வெப் டிசைனிங் என்று நீங்கள் எதில் புலியோ அதையே அடிப்படையாகவைத்து  ஆன்லைன் மூலம் பயிற்சியாளராக உருவெடுக்கலாம்.

வாகனம் ஓட்டத் தெரிந்தால் காசு!

பதினெட்டு வயது நிரம்பியவரா நீங்கள்? உங்களிடம் இருசக்கர வாகனம் ஓட்டுவதற்கான உரிமம் இருக்கிறதா? இருசக்கர வாகனமும் இருக்கிறதா? அப்படியென்றால் கவலையை விடுங்கள். ஸ்விக்கி, ஸொமாட்டோ, ஊபர் ஈட்ஸ், பிளிப்கார்ட், அமேசான், ஸ்நாப்டீல் போன்ற ஆன்லைன் வர்த்தக நிறுவனங்களில் பொருட்கள், உணவுகளை டெலிவரி செய்வதற்கான வாய்ப்புகள் உங்கள் கண்முன்னே இருக்கிறது. பகுதிநேர வேலையாக இவற்றை எடுத்துச் செய்து பணம் சம்பாதியுங்கள் நண்பர்களே.....

உடற்பயிற்சி வகுப்பு எடுத்தாலும் மதிப்பு அதிகம்!

Image by Darren Constance from Pixabay

உடலை சிறந்த முறையில் கட்டுமஸ்த்தாகப் பராமரிப்பவரா நீங்கள்? உடற்பயிற்சிக்கூடத்தில் சொல்லித்தரப்படும் உடற்பயிற்சிகள் அனைத்தும் உங்களுக்கு அத்துப்படியா? அப்படியென்றால் பகுதிநேர ஜிம் பயிற்சியாளர் வேலை உங்களுக்குத்தான் பொருத்தமாக இருக்கும். இதன்மூலம் மாதாமாதம் குறிப்பிட்ட தொகையை வருமானமாக நீங்கள் பெறமுடியும்.

ஒப்பனைக் கலைஞராகவும் ஒளி வீசலாம்!

உணவுத் தொழில் எப்படி நிச்சய வருமானம் தரும் தொழிலாக இருக்கிறதோ, அதேபோல பிறருக்கு ஒப்பனை செய்துவிடும் தொழிலும் நிச்சய வருமானம் தரும் தொழிலாகவே இருக்கிறது. எனவே தங்களை நேர்த்தியாக அலங்கரித்துக் கொள்பவர்கள், ஒப்பனை அறிவு அதிகம் இருப்பவர்கள் அழகுக் கலை நிலையங்களில் பகுதிநேரப் பணியாற்றலாம்.

பலனளிக்கும் பல்பொருள் அங்காடிகள்

சில்லறை மளிகைக்கடைகள், பல்பொருள் அங்காடிகள், பெரிய பெரிய வணிக வளாகங்கள் போன்றவற்றில் ஏராளமான வேலைவாய்ப்புகள் காத்திருக்கின்றன. எனவே பகுதிநேர வேலை தேடுபவர்கள் இவை போன்ற இடங்களையும் குறி வைக்கலாம்.

சுற்றுலா வழிகாட்டிக்கு வாய்ப்புகள் அதிகம்

ஒன்றுக்கும் மேற்பட்ட மொழிகள் தெரிந்தவரா நீங்கள்? நீங்கள் வசிக்கின்ற ஊரில் அல்லது நீங்கள் வசிக்கின்ற இடதிற்குச் சற்று அருகில் இருக்கின்ற சுற்றுலாத்தலங்கள், நினைவுச் சின்னங்கள், கோவில்கள் பற்றிய உண்மையான தகவல்கள்  அனைத்தும் உங்கள் விரல் நுனியில் இருக்கிறதா? அப்படியென்றால் பகுதிநேர சுற்றுலா வழிகாட்டி ஆகிவிடுங்கள். இதன்மூலம் மாதாமாதம் மதிப்பான ஊதியத்தை நீங்கள் ஈட்ட முடியும்.

காரைக் கழுவினாலும் வயிற்றைக் கழுவலாம் !

உடலால் உழைக்க நீங்கள் தயாரா? அப்படியென்றால் உங்களுக்கு அருகாமையில் இருக்கின்ற கார் கழுவும் மையத்தில் பகுதிநேர ஊழியராகச் சேர்ந்துவிடுங்கள். உங்கள் உழைப்புக்கு ஏற்ற பணத்தை ஈட்டிச் செல்லுங்கள்.

டோமினோஸ்‌, கே.எப்.சியும் வருமானம் கொடுக்கும்!

மேற்சொன்ன உணவகங்களுக்கு சாப்பிட மட்டுமல்ல சம்பாதிக்கவும் செல்லலாம். ஆமாம். கட்டண ரசீது போடுபவர், உணவு விநியோகிப்பவர் என்று பகுதிநேர வேலைகள் அங்கே காத்திருக்கின்றன. எனவே இதுபோன்ற வாய்ப்பை முடிந்தவரை பயன்படுத்திக்கொள்ளுங்கள்.

மெடிக்கல் டிரான்ஸ்கிரிப்ஷன்-க்கு மவுசு அதிகம்!

உங்களிடம் கணினி இருக்கிறதா? இயர் போன்(ear phone)வைத்திருக்கிறீர்களா?.உங்களுக்கு வேகமாக ஆங்கிலத் தட்டச்சு செய்ய வருமா? அப்படியென்றால் இந்த வேலைக்குச் சரியானவர் நீங்கள்தான். உடனே ” Medical Transcription Job in my  City” என்று கூகிள் செய்யுங்கள். பகுதிநேர மெடிக்கல் டிரான்ஸ்கிரிப்ஷன் செய்து பணம் சம்பாதியுங்கள்.

டேட்டா என்ட்ரியும் கைகொடுக்கும்!

Image by mohamed Hassan from Pixabay

பகுதிநேர வேலை மூலம் பணம் சம்பாதிக்க மாணவர்கள் அதிக அளவில் நாடிச் செல்லும் வேலை இதுதான். உங்களிடம் படிவங்களும் அதில் நிரப்பவேண்டிய தகவல்களும் அனுப்பப்படும்.கணினி உதவியோடு  நீங்கள்  உங்களுக்குக் கொடுக்கப்பட்டிருக்கும் தகவல்களை படிவங்களில் நிரப்பிக் கொடுக்கவேண்டும் அவ்வளவுதான். மிக எளிமையான வேலை இது என்பதால் படித்துக்கொண்டே வேலைபார்ப்பதில் உங்களுக்கு எந்தவித சிரமும் ஏற்படாது.

காப்பீட்டு முகவரானால் காசு நிச்சயம்!

உங்களால் மற்றவர்களுடன் எளிதில் தொடர்புகொள்ள முடியுமா? கூடவே பேச்சுத்திறனும் உங்களுக்கு உள்ளதா? அப்படியென்றால் உடனே காப்பீட்டு முகவர் பணியை பகுதிநேரமாகத் தேர்ந்தெடுங்கள். உங்களுக்கான வருமானத்தை ஈட்ட ஆரம்பியுங்கள்.

தொழில் சார்ந்த மொழிபெயர்ப்பாளர்

வெவ்வேறு நாடுகளைச் சேர்ந்த அரசியல் தலைவர்கள் ஒருவரை ஒருவர் சந்திக்கும்போது அவர்கள் இருவருக்கும் இடையில் மொழிபெயர்ப்பாளர் இருப்பார். அதேபோல வெவ்வேறு நாடுகளைச் சேர்ந்த தொழில்முனைவோர் சந்தித்துக்கொள்ளும்போது அவர்களுக்காகவும் இந்த மொழிபெயர்ப்பாளர்கள் வேலை செய்கிறார்கள்.

இவ்வளவு ஏன்? இப்போதெல்லாம் சிறிய அளவில் தொழில் செய்யும் தொழில்முனைவோருக்குக் கூட மொழிபெயர்ப்பாளர்கள் தேவைப்படுகிறார்கள். இவர்களை ஆங்கிலத்தில் interpreter என்று நாம் குறிப்பிடுகிறோம். குறிப்பாக ரஷ்ய மொழி,சீன மொழி போன்ற உலக மொழிகளைத் தெரிந்து வைத்திருக்கும் மாணவர்களுக்கு இத்துறையில் பிரகாசமான பகுதிநேர வேலைவாய்ப்புகள் காதிருக்கின்றன.

கைகொடுக்கும் ப்ரீலான்ஸ் வேலைகள்

உங்களால் எப்போதெல்லாம் முடியுமோ அப்போதெல்லாம் உங்களுக்குத் தெரிந்த வேலைகளை செய்துகொடுத்து உங்கள் வேலைக்கேற்ற ஊதியத்தைப் பெறமுடியும். வெப் டிசைனிங், புரோகிராமிங், கிராபிக் வரைகலை, குறிப்பிட்ட நிறுவனத்திற்கான சின்னங்களை உருவாக்கித்தரும் பணி என்று எக்கச்சக்க பகுதிநேர வேலைவாய்ப்புகள் உங்களுக்காகக் காத்திருக்கிறது. பைவர் (Fiverr) போன்ற ஆன்லைன் இணையதளங்கள் மேற்சொன்ன  பகுதிநேர வேலைவாய்ப்புக்களை வாரி வழங்குகின்றன.

இவைதவிர, கண்டெண்ட் ரைட்டர், தமிழிலிருந்து ஆங்கிலத்திற்கு அல்லது ஆங்கிலத்திலிருந்து தமிழுக்கு கட்டுரைகளை மொழியாக்கம் செய்துகொடுப்பவர்  போன்ற பகுதிநேர வேலைவாய்ப்புக்களை வழங்க அப்வொர்க்(Upwork) போன்ற ஆன்லைன் இணையதளங்களும் காத்திருக்கின்றன.